5 கோவில்களில் உண்டியல்களை எண்ணியதில் ரூ.2்லட்சம் காணிக்கை


5 கோவில்களில் உண்டியல்களை எண்ணியதில் ரூ.2்லட்சம் காணிக்கை
x

காங்கயம் அருகே 5 கோவில்களில் உண்டியல்களை எண்ணியதில் ரூ.2்லட்சம் காணிக்கையாக இருந்தது.

திருப்பூர்

காங்கயம் அருகே 5 கோவில்களில் உண்டியல்களை எண்ணியதில் ரூ.2்லட்சம் காணிக்கையாக இருந்தது.

உண்டியல் எண்ணும் பணி

காங்கயம் அருகே உள்ள 5 கோவில்களில் உண்டியல் திறக்கப்பட்டு அதிகாரிகள் மூலம் உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் காங்கயத்தை அடுத்துள்ள மடவிளாகத்தில் அமைந்துள்ள ஆருத்ரா கபாலீஸ்வரர்,ரகுபதி நாராயண பெருமாள் கோவிலில் காணிக்கையாக ரூ. 61 ஆயிரத்து 645 இ்ருந்தது. பேட்டை மாரியம்மன்,மாகாளியம்மன் கோவிலில் ரூ.25 ஆயிரத்து 415-ம், காங்கயம் பழைய கோட்டை சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் சாமி கோவிலில் ரூ.5 ஆயிரத்து 225-ம், பிரசன்ன வெங்கட ரமணசாமி கோவிலில் ரூ.46,315-ம், பெருமாள்மலை ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் உண்டியலில் ரூ.23ஆயிரத்து 100-ம் என மொத்தம் 5 கோவில்களில் உள்ள உண்டியல்களில் செலுத்தப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 11 காணிக்கையாக இருந்தது.

வைப்புத்தொகையாக

உண்டியல் எண்ணும் பணி இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையில் கண்காணிப்பாளர் பால்ராஜ்,ஆய்வாளர் சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

கோவில் உண்டியல் மற்றும் நன்கொடையாக வந்த தொகையினை அந்தந்த கோவில்களின் பெயர்களில் வங்கியில் வைப்புத்தொகையாக செலுத்தப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story