மோட்டார் சைக்கிள் மோதி கோவில் பூசாரி படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதி கோவில் பூசாரி படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மோதி கோவில் பூசாரி படுகாயம் அடைந்தார்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள பாதிரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் தோகைமலையில் உள்ள பெருமாள் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 22-ந் தேதி இவர் குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திருச்சி மிளகுபாறை பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 47) என்பவர் அதே மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சண்முகம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அண்ணாதுரை மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அண்ணாதுரையை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தோகைமலை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story