திண்டிவனத்தில் லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


திண்டிவனத்தில்   லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேரோட்டம்  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x

திண்டிவனத்தில் லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனத்தில் பிரசித்தி பெற்ற கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வெவ்வேறு வாகனத்தில் சாமி எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது. விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்ம சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, மகா தீபாராதனை நடைபெற்றது.

தேரோட்டம்

காலை 5.30 மணிக்கு மேல் கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி அலங்கரிக்கப்பட்ட தேரில், எழுந்தருளினார். பின்னர் தேருக்கு பூஜைகள் நடந்து, தேரோட்டம் தொடங்கியது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பக்தர்களுடன் சேர்ந்து வடம் பிடித்து தேரை இழுத்தார்.

தேர், ஈஸ்வரன் கோவில் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, நேரு வீதி, ராஜாஜிவீதி வழியாக வந்து நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பல்லக்கு வாகனத்தில் நாச்சியார் சம்பவரதமும், மாலையில் சந்திரபிரபையும், நாளை(திங்கட்கிழமை) விடையாற்றி விழாவும் நடைபெற இருக்கிறது.

தேரோட்டத்தில் ராம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் தியாகராஜன் செட்டியார், வெங்கடேசன், பி.ஆர்.எஸ். ஜவுளி கடை உரிமையாளர் ரங்கமன்னார் செட்டியார், சரத், கே.எஸ்.பி. ஜவுளி ரெடிமேட்ஸ் உரிமையாளர் தினகரன் செட்டியார், செந்தில்குமார், பால்பாண்டியன், பாத்திரக்கடை உரிமையாளர் ரமேஷ், பி.என்.ஆர்.லட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் நாராயணன், சரவணன், கே. ஆர்.எஸ். பில்டர்ஸ் உரிமையாளர் தொழிலதிபர் சுப்பராயலு, சாம்ராஜ் லேப் உரிமையாளர் சம்பத் குமார், ஒப்பந்ததாரர் டி.கே.குமார், முன்னாள் கவுன்சிலர் கல்யாணிகுமார், ஓம் சக்தி ஏஜன்சிஸ் உரிமையாளர் சக்திவேல், ராஜன் ஹெவி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் கோவிந்தராஜி, திண்டிவனம் கார்த்திக் ஸ்டூடியோ உரிமையாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தினேஷ், செயல் அலுவலர் ஸ்ரீ கன்யா, கோவில் எழுத்தர் சங்கர், பட்டாச்சாரியார்கள் ரகு, ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story