பிரத்தியங்கரா தேவி கோவிலில் திருப்பணிகள் தொடக்கம்


பிரத்தியங்கரா தேவி கோவிலில் திருப்பணிகள் தொடக்கம்
x

பிரத்தியங்கரா தேவி கோவிலில் திருப்பணிகள் தொடங்கியது.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே அய்யாவாடி கிராமத்தில் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பிரத்தியங்கரா தேவி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் தொடங்க உள்ளதை முன்னிட்டு நேற்று காலை கோவில் விமான பாலஸ்தாபனம் நடைபெற்றது. இதனை ஒட்டி கோவில் மண்டபத்தில் 9 விமானங்களுக்கு 9 கலசங்கள் வைக்கப்பட்டு, அகஸ்தீஸ்வரர், தர்ம சம்வர்த்தினி, பிரித்தியங்கரா தேவி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யாக பூஜை நடந்தது. அப்போது அத்தி மரத்தினால் ஆன விமான சித்திரங்களில் ஆவாகனம் செய்யப்பட்டது. பாலஸ்தாபன பூஜைகள் கோவில் அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டதை முன்னிட்டு குடமுழுக்கு முடியும் வரை அமாவாசை அன்று நடத்தப்படும் நிகும்பலா யாகம் நிறுத்தி வைக்கப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story