மணல் மூட்டைகளால் தற்காலிக தடுப்புச்சுவர்
பெரும்பாறை அருகே மலைப்பாதையில் மணல் மூட்டைகளால் தற்காலிக தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திண்டுக்கல்
பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு உள்ளிட்ட கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதற்கிடையே பெரும்பாறை அருகே மீனாட்சி ஊத்து பகுதியில் மலைப்பாதையில் இருந்த தடுப்புச்சுவர் கனமழைக்கு இடிந்து சேதமானது. இதனால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பு இல்லை. இருப்பினும் தடுப்புச்சுவர் இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அங்கு மணல் மூட்டைகளால் தற்காலிக தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பரத், சாலை ஆய்வாளர் சவுந்தரராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story