34 உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிக ரத்து


34 உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிக ரத்து
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் விதிமீறல் கண்டறியப்பட்ட 34 உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் விதிமீறல் கண்டறியப்பட்ட 34 உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரகுமார் மேற்பார்வையில் வட்டார அளவில் சிறப்பு ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து மொத்த, சில்லரை உர விற்பனை நிலையங்கள், உரக்கிடங்குகள் மற்றும் கலப்பு உர நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இந்த ஆய்வுகள் நடந்தன.

விவசாயிகளுக்கு உரிய உரங்கள் கிடைத்திடவும், நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்கள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் உரக்கடத்தல், உரப்பதுக்கல், வேளாண்மை அல்லாத பிற பயன்பாடுகளுக்கு உபயோகித்தல், விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளுக்கு அவர்களின் ஆதார் எண் பயன்படுத்தி உரங்களை விற்பனை செய்ய்படுகிறதா என்பது குறித்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் யூரியாவுடன் கூடுதல் இணைப்பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுகின்றதா என்று ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ மீறி செயல்பட்ட 34 உர விற்பனை நிலையங்களின் உர உரிமம் தற்காலிக ரத்தும், தற்காலிக விற்பனை தடையும் செய்யப்பட்டது.

இருப்பு பதிேவடு

இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் கூறுகையில், ஆய்வின் போது ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள் இருப்பு பதிவேட்டில் எழுத்துபூர்வமாக உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ மீறிய செயல்படுகளை பதிவு செய்தால் அந்த உர விற்பனை நிலையத்தின் உர உரிமம் ரத்து செய்ய நேரிடும் என்றார்.


Next Story