தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 2 அலகுகளில் மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம்


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 2 அலகுகளில் மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம்
x

காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி அளவு உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் தென் மாவட்டங்களில் காற்றாலைகள் மூலமாகவும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி அளவு உயர்ந்துள்ளது. இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 அலகுகளில் சுமார் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story