10 கிலோ கத்தாழை மீன்கள் ரூ.49 ஆயிரத்துக்கு ஏலம்


10 கிலோ கத்தாழை மீன்கள் ரூ.49 ஆயிரத்துக்கு ஏலம்
x

முத்துப்பேட்டையில், மருத்துவ குணம் வாய்ந்த 10 கிலோ கத்தாழை மீன்கள் ரூ.49 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டையில், மருத்துவ குணம் வாய்ந்த 10 கிலோ கத்தாழை மீன்கள் ரூ.49 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

மீன் மார்க்கெட்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடல் சார்ந்த பகுதி என்பதால் இப்பகுதியில் உள்ள ஆசாத்நகர் மற்றும் பெரியக்கடைத்தெரு மீன் மார்க்கெட்டுகளுக்கு பல்வேறு வகை மீன்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு இருக்கும். குறிப்பாக இப்பகுதியில் உள்ள அலையாத்திகாடு வேர்களில் உற்பத்தியாகி வளரக்கூடிய மீன் வகைகள் அதிக ருசி கொண்டதாக இருக்கும்.இதனால் அதிக அளவில் இப்பகுதியில் உற்பத்தியாகும் கொடுவா, கெண்டை, வெள்ளாம்பொடி, கத்தாழை போன்ற மீன்கள் இப்பகுதியில் உள்ள பெரியக்கடைத்தெரு மற்றும் ஆசாத்நகர் மீன் மார்கெட் பகுதியில் அதிக அளவில் விற்பனைக்கு வரும்.

ஆண் கத்தாழை மீன்கள்

மற்ற வகை மீன்கள் அருகில் உள்ள நாகப்பட்டினம், கோடியக்கரை, மல்லிபட்டினம் போன்ற பகுதியில் இருந்து ஆசாத்நகர் மீன்மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த நிலையில் முத்துப்பேட்டை அலையாத்திகாடு நிறைந்த லகூன் பகுதியில் சிக்கும் அதிக மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீன்கள் நேற்று ஆசாத்நகர் மீன்மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.கத்தாழை மீன்களில் ஆண் கத்தாழை மீன்கள் அதிக விலைக்கு விற்கப்படும். ஆண் கத்தாழை மீன்களின் வயிற்றில் இருக்கும் நெட்டி மருத்துவ குணம் வாய்ந்தது. இந்த நெட்டிக்காகவே இந்த மீன்கள் அதிக விலை போகும்.

ஏலம்

இந்தநிலையில் நேற்று ஆசாத்நகர் மீன் மார்க்கெட்டுக்கு மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய மொத்தம் 3 ஆண் மீன்கள்( சுமார் 10கிலோ எடை கொண்டவை) ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இ்ந்த 3 மீன்களும் ரூ.48 ஆயிரத்து 900-க்கு ஏலம் போனது. ரூ.30 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் தொடர்ந்து படிப்படியாக உயர்ந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் கேட்டனா். இந்த ஏலத்தை ஏராளமானோா் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story