குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகை போராட்டம்


குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
x

நாகையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

நாகை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வடிவேல், துணைச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொருளாளர் துரைராஜ், மாவட்ட செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யூ. மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பட்டா வழங்க வேண்டும்

பல தலைமுறைகளாக கோவில் இடங்களில் குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளை பொது ஏலம் என்ற பெயரில் நிலத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். கொரோனா கால அடிமனை வாடகையை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட பொருளாளர் பொன். மணி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story