அக்கரைப்பட்டியில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


அக்கரைப்பட்டியில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 24 July 2023 7:00 PM GMT (Updated: 24 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. அளவாய்பட்டி, நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி, மாமுண்டி, பாலமேடு, நாச்சிப்பட்டி, சப்பையாபுரம், கல்கட்டானூர், மதியம்பட்டி, வெண்ணந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர். சுரபி ரக பருத்தி 369 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6,809 முதல் அதிகபட்சமாக ரூ.7439 வரை விற்பனை ஆனது. மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பருத்தியின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story