நாமக்கல்லில் ரூ.7½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்


நாமக்கல்லில்  ரூ.7½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ரூ.7½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்

நாமக்கல்லில் ரூ.7½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் தீபாவளி பண்டிகையை விடுமுறையை யொட்டி நேற்று முன்தினம் ஏலம் நடைபெறவில்லை. எனவே நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 310 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

சுரபி ரகம் வரவில்லை

இந்த பருத்தி மூட்டைகள் ரூ.7½ லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 369 முதல் ரூ.9 ஆயிரத்து 99 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.2,799 முதல் ரூ.5 ஆயிரத்து 350 வரையிலும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். சுரபி ரக பருத்தி ஏலத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story