திருச்செங்கோட்டில்ரூ.22 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்


திருச்செங்கோட்டில்ரூ.22 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,202 முதல் ரூ.8,559 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,209 முதல் ரூ.6,510 வரை விற்பனை ஆனது. மொத்தம் 600 மூட்டை மஞ்சள் ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போனது.

இதே போல் பிரதி வாரத்தில் மஞ்சள் ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story