டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்


டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
x

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

திருப்பூர்

திருப்பூர்

வெள்ளகோவிலில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் உத்தரவின் பேரிலும் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் மேற்பார்வையிலும் அனைத்து வார்டுகளிலும் உள்ள கடைகள், வீடுகள், அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் கொசு புகை மருந்துகள் அடிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் குடியிருப்புகளிலுள்ள தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமலும் கொசு புகாத வண்ணம் மூடி பாதுகாக்கவும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்கவும் தண்ணீரை காய்ச்சி குடிக்கவும் நகராட்சி ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.

----------


Next Story