டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
திருப்பூர்
தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி அறிவுறுத்தலின்படி வெள்ளகோவில் சமுதாய சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் கோபிநாத் மற்றும் சுகாதார ஆய்வாளர் கதிரவன் தலைமையில் மருத்துவ குழுவினர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நேற்று காலை காமராஜபுரம் மற்றும் உப்புபாளையம் பகுதிகளில் வீடு,வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்றது.
டாக்டர் கோபிநாத் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை பணிகளை வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகத்தினருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
==============