தென்காசி கலெக்டர் ஆகாஷ் பொறுப்பேற்றார்- `எனது அனுபவங்களை கொண்டு மக்களுக்கு பணியாற்றுவேன்' என பேட்டி


தென்காசி கலெக்டர் ஆகாஷ் பொறுப்பேற்றார்-  `எனது அனுபவங்களை கொண்டு மக்களுக்கு பணியாற்றுவேன் என பேட்டி
x

தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக ஆகாஷ் பொறுப்பேற்றார். அப்போது அவர் தனது அனுபவங்களைக் கொண்டு மக்களுக்கு பணியாற்றுவேன், என்று கூறினார்

தென்காசி

தென்காசி:

தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக ஆகாஷ் பொறுப்பேற்றார். அப்போது அவர் தனது அனுபவங்களைக் கொண்டு மக்களுக்கு பணியாற்றுவேன், என்று கூறினார்.

புதிய கலெக்டர்

நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாகி 2 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த மாவட்டத்தில் இதுவரை அருண் சுந்தர் தயாளன், சமீரன், கோபால சுந்தரராஜ் ஆகிய 3 பேர் மாவட்ட கலெக்டர்களாக பணி புரிந்துள்ளனர். இறுதியாக பணியாற்றிய கோபால சுந்தரராஜ் வணிகவரித் துறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை பெருநகர நீர் வழங்கல் பிரிவில் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய ஆகாஷ், தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக நியமனம் செய்யப்படார்.

பொறுப்பேற்பு

அவர் நேற்று காலை தென்காசி மாவட்ட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

ஆகாஷ், கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தபோது சேரன்மகாதேவி உதவி கலெக்டராக பணிபுரிந்து வந்தேன். இந்த பகுதி தனக்கு அறிமுகமான பகுதி. பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையராகவும், சென்னை குடிநீர் வழங்கல் பிரிவிலும் பணி புரிந்தேன். இந்த அனுபவங்களை கொண்டு தென்காசி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றிட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story