தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டம்


தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டம் நடந்தது

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தீர்மானங்களை வாசித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் மாரிச்சாமி, புளியங்குடி நகராட்சி தலைவர் விஜயா உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவிஜயன் தொகுத்து வழங்கினார்.

இதில் தனுஷ்குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் செண்பகவிநாயகம், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையாபாண்டியன், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசும்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு தற்போது இருந்தே பணியை தொடங்கி வெற்றி பெற வைக்க வேண்டும், என்றார்.

இதில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, மூத்த வழக்கறிஞர் சண்முகையா, அரசு வழக்கறிஞர்கள் கண்ணன், அன்புசெல்வன், ஜெயக்குமார், இளைஞரணி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.


Next Story