தென்காசி போலீசாருக்குநெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு


தென்காசி போலீசாருக்குநெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு
x

தென்காசி போலீசாரை நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டினார்.

திருநெல்வேலி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்த 8 கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேஷாகிரி தலைமையிலான ஆலங்குளம் உட்கோட்ட தனிப்படை தலைமை காவலர்கள் மோகன்ராஜ், குமரேச சீனிவாசன், முதல்நிலை காவலர் சவுந்தரபாண்டியன், மகேஷ் மற்றும் லிங்கராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தனர்.

இதனை அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், தனிப்படை போலீசாரை நேற்று நெல்லையில் உள்ள தனது அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


Next Story