புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து ஆக்கிரமிக்க முயற்சி


புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து ஆக்கிரமிக்க முயற்சி
x

திருப்பூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து சிலர் ஆக்கிரமிக்க முயன்றனர். இதையடுத்து தாசில்தார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனே ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

திருப்பூர்

திருப்பூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து சிலர் ஆக்கிரமிக்க முயன்றனர். இதையடுத்து தாசில்தார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனே ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

புறம்போக்கு நிலம்

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி மீனாம்பாறை பகுதியில் 40 சென்ட் பரப்ப ளவில் வண்டி தடம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த புறம்போக்கு நிலத்தில் மீனாம்பாறை மற்றும் அவரப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூடாரம் அமைத்து ஆக்கிரமிக்க முயன்றனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, " நீண்ட நாட்களாக வீடு இன்றி வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்குமாறு பலமுறை மனு அளித்துள்ளோம். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த இடம் ஆக்கிரமிப்பில் இருந்த போது அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து நாங்கள் தான் இந்த இடத்தை மீட்டோம். எனவே வீடு இல்லாத எங்களுக்கு இந்த இடத்தை வழங்கி பட்டா வழங்க வேண்டும்" என்றனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த பல்லடம் வருவாய் ஆய்வாளர் அனிதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பொதுமக்கள் காலி செய்ய மறுத்தனர். அப்போது ஒருவர் வருவாய் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை

இதையடுத்து தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆய்வுக்குப்பின் பட்டா வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். ஆக்கிரமிப்புகளை நீங்களே அகற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும். பட்டா வழங்கும் வரை யாரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது.

மீறினால் கம்பி வேலி அமைத்து இடத்தை பாதுகாப்பதுடன் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் போது கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் கவுரி மற்றும் உதவியாளர் நிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story