அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடை நீக்கம்


அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடை நீக்கம்
x

பணியில் மெத்தனமாக இருந்ததாக அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.

மயிலாடுதுறை

பணியில் மெத்தனமாக இருந்ததாக அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.

அங்கன்வாடியில் கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே டி.மணல்மேடு கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த அங்கன்வாடி மையத்தில் பணியாளராக ரமா என்பவரும், உதவியாளராக லதா என்பவரும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி இந்த அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

பணியில் மெத்தனம்

இந்த ஆய்வில் அங்கன்வாடியில் உள்ள உணவு பொருட்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை. பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. காலையில் குழந்தைகளுக்கு கொழுக்கட்டை வழங்கப்படவில்லை. மதிய உணவிற்காக எந்தவித தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை என்பது தெரிய வந்தது.

பணியிடை நீக்கம்

மேலும் அங்கன்வாடி பணியாளர் ரமா, உதவியாளர் லதா ஆகியோர் பணியில் மெத்தனமாக இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்்து டி.மணல்மேடு அங்கன்வாடி மைய பணியாளர் ரமா, உதவியாளர் லதா ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story