போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x

கஞ்சா வியாபாரியுடன் தொடர்புடைய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி

கஞ்சா வியாபாரியுடன் தொடர்புடைய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு

திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் முக்கிய கஞ்சா வியாபாரி ஒருவரை பிடிக்க போலீசார் கடந்த சில நாட்களாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் அந்த கஞ்சா வியாபாரி போலீசாரின் வலையில் சிக்காமல் தொடர்ந்து தப்பி வந்தார்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இதில், கஞ்சா வியாபாரியுடன் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ராஜாகார்த்திகேயன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜா கார்த்திகேயன் போலீஸ் உதவி கமிஷனரின் தனிப்படையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story