அலங்கார பொருட்கள் குடோனில் பயங்கர ‌தீ


அலங்கார பொருட்கள் குடோனில் பயங்கர ‌தீ
x

பரமத்திவேலூர் அருகே அலங்கார பொருட்கள் குடோனில் தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

அலங்கார பொருட்கள்

பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் மருதகுமார் (வயது80). இவர் வேலூரில் இருந்து பொத்தனூர்‌ செல்லும் சாலையில் திருமணம்‌ மற்றும் பல்வேறு‌ விழாக்களுக்கு‌‌ மேடைகளில் அலங்காரம் செய்யப்படும் மணவரை டெக்கரேட் பொருட்கள் வைக்கும் குடோன் வைத்து நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை மணவரை டெக்ரேட் குடோனில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ரூ.3 லட்சம் பொருட்கள்

இருப்பினும் குடோனில் வைக்கிப்பட்டிருந்த அலங்காரப் பொருட்கள் மற்றும் அலங்கார செய்யப் பயன்படுத்தும் விலை உயர்ந்த துணிகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர். மேலும் குடோனில் நேற்று பணியாட்கள் யாரும் வேலைக்கு வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story