மதுரையில் ரெயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து.. 2 பேர் பலி.!


மதுரையில் ரெயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து.. 2 பேர் பலி.!
x
தினத்தந்தி 26 Aug 2023 7:00 AM IST (Updated: 26 Aug 2023 7:38 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ, மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளிலும் பரவியது.

மதுரை,

மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ரெயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரெயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ, மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளிலும் பரவியது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைவாக வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன்ர். இந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரும் சமையலர்களாக பணியாற்றி வந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story