மலைப்பகுதியில் பயங்கர தீ
வத்திராயிருப்பு அருகே சின்னகுட்டம் மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே சின்னகுட்டம் மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பயங்கர தீ
வத்திராயிருப்பு அருகே நெடுங்குளம் - தாணிப்பாறை செல்லும் சாலையில் சின்னகுட்டம் மலைப்பகுதி உள்ளது. இந்த மலை அடிவாரப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, மா விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சின்னகுட்டம் மலைப்பகுதியில் பயங்கர காட்டு தீ நேற்று ஏற்பட்டது.
மாலையில் சிறிதாக ஏற்பட்ட தீயானாது நேரம் ஆக மலையை சுற்றி தொடர்ந்து பரவி வருகிறது. தொடர்ந்து தீ பரவி வருவதால் மலை அடிவாரப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கை
மேலும் மலை அடிவாரப்பகுதியில் ஏராளமான மின்கம்பங்களும் உள்ளன. இதுகுறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தீ தொடர்ந்து பரவி வருவதால் அச்சமடைந்துள்ள விவசாயிகள் மலை அடிவாரப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தீ பரவமால் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் விவசாய நிலத்திற்குள் தீ பரவாமல் இருக்க வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.