ஊத்துக்கோட்டையில் பயங்கரம்: வாலிபர் வெட்டிக்கொலை


ஊத்துக்கோட்டையில் பயங்கரம்: வாலிபர் வெட்டிக்கொலை
x

ஊத்துக்கோட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் பொன்னேரியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராபின் (வயது 24). இவர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுவாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

ராபினின் நண்பரின் திருமண விருந்து நிகழ்ச்சி ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

ராபின் தன்னுடைய நண்பர் கமல் என்பவருடன் விருந்தில் கலந்து கொண்ட பின்னர் இரவு 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் ராபின் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரிவாளால் தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இது குறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரகாசன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story