சொத்து தகராறில் பயங்கரம்: தாய்-மகன் கத்தியால் குத்திக்கொலை


சொத்து தகராறில் பயங்கரம்: தாய்-மகன் கத்தியால் குத்திக்கொலை
x

சொத்து தகராறில் பயங்கரம்: தாய்-மகன் கத்தியால் குத்திக்கொலை.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள செருகளத்தூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 55). இவருக்கும், அவருடைய அண்ணன் ஆரோக்கியதாசுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆரோக்கியதாசின் மகன்கள் அன்பழகன், ஸ்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஸ்கரின் மகன் அஜய் (19) என்பவரும் வந்துள்ளார். அப்போது ஸ்டீபன், அஜயை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இந்த தகவல் அறிந்து அஜயின் தாய் அலங்காரமேரி (55) அங்கு சென்றார். அவரை ஸ்டீபனின் அண்ணன் அன்பழகன் கத்தியால் குத்திக்கொன்றார். இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அவருடைய தம்பி ஸ்டீபன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story