கம்பத்தில் பயங்கரம் தகராறை தட்டிக்கேட்ட மைத்துனர் குத்திக்கொலை


கம்பத்தில் பயங்கரம்  தகராறை தட்டிக்கேட்ட மைத்துனர் குத்திக்கொலை
x

கம்பத்தில் தகராறை தட்டிக்கேட்ட மைத்துனரை கத்தியால் குத்தி கொன்று விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

குடும்ப தகராறு

தேனி மாவட்டம் கம்பம் கிராமச்சாவடி தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 60). இவரது மனைவி விஜயலட்சுமி (51). இந்த தம்பதியின் மகன்கள் சிவக்குமார் (25), சங்கர் (22). மகள் சங்கீதா (20). சங்கர் கட்டிட வேலை செய்து வந்தார். இ்ந்நிலையில் சங்கீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான காளிராஜ் (31) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சங்கீதா அதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சங்கர் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சிவக்குமாருக்கும், சங்கருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

கத்தியால் குத்தி கொலை

அப்போது அங்கு வந்த காளிராஜ், சங்கரை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காளிராஜ் நெஞ்சில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் கீழே விழுந்தார். பின்னர் சங்கர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய சங்கா் தங்கையின் கணவரை கொலை செய்ததால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்தார்.

தற்கொலை

பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் மருத்துவமனைக்கு சென்றதை அறிந்து அங்கு வந்த சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அங்கு வந்த சங்கரின் பெற்றோர் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் தெற்கு போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப தகராறில் மைத்துனரை கத்தியால் குத்தி கொன்று விட்டு கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story