தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும்-டி.டி.வி. தினகரன் பேட்டி


தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும்-டி.டி.வி. தினகரன் பேட்டி
x

தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

அரியலூர்

அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் அரியலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜெயலலிதா மரணத்தில் அரசியல் செய்வது போன்ற கீழ்த்தரமான அரசியலில் தி.மு.க. தலைவர் ஈடுபடக்கூடாது. கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கிறது. தீவிரவாதத்தை வேரோடு அழிக்க தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு, மத்திய அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும். கடந்த 1998-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது குண்டு வெடிப்பு நடைபெற்றது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதிகள், ரவுடிகள் தலை தூக்க ஆரம்பிக்கின்றனர். தி.மு.க. அரசின் செயல்பாடு தீய செயலுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக நடந்து கொள்கிறது. இது விடியல் அரசு இல்லை, விடியா அரசு. தி.மு.க.வை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் காலம் விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story