பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்


பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும் என்று கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்


பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும் என்று கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தடுக்க வேண்டும்

தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். பின்னர் அவர் கோவையில் நேற்று நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மாலை 6 மணியளவில் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை என்றாலே பரபரப்பு என்றநிலை இன்றி அமைதியாக இருக்க வேண்டும். பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்.

தமிழக அரசின் என்.ஐ.ஏ. விசாரணை பரிந்துறையை மத்திய அரசு ஏற்று உள்ளது. இதில் ஒரு உத்தரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு செயல்பட வேண்டும்.

மேலும் கோவை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து இருக்கிறது. ஏன் இப்படி நடந்தது என்பதை காவல்துறை பார்க்க வேண்டும். என்.ஐ.ஏ. மடுமல்ல, தமிழ்நாடு காவல்துறையும் கோவை சம்பவத்தில் கவனமுடன் இருந்து இருக்க வேண்டும்.

கியாஸ் சிலிண்டர் என்று மேலோட்டமாக சொன்னார்கள். பின்னர் அது வேறு விதமாக மாறியது. ஒருத்தர் மேல கவனத்தை செலுத்தாமல் முற்றிலும் பாதுகாப்பை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

மக்களின் பாதுகாப்பு

குண்டு வெடித்ததை பா.ஜ.க. சொல்லித்தான் பீதி அடையனுமா மக்கள் எல்லோரும் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய கருத்துகள் வரும் போது எச்சரிக்கையாக இருக்க வாய்ப்பு உள்ளது. பந்த் நடத்துவது என்பது போராட்ட வழிமுறை.

கோவையில் அமைதியான முறையில் கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் முறைதான் பந்த். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

அரசியல்வாதிகள் சமூகவளைதளங்களில் நாகரீகமாக கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story