பால் விற்பனையாளர்களிடம் அதிகாரிகள் சோதனை


பால் விற்பனையாளர்களிடம் அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் பால் விற்பனையாளர்களிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரையில் ஆவின் விற்பனையகம் தவிர கிராமப்புறங்களில் இருந்து பால் கறந்து வந்து வீடுகள் தோறும் ஏராளமானவர்கள் பால், தயிர், மோர் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று காலை உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் தலைமையில் அதிகாரிகள், பால் பண்ணை, பால் விற்பனையாளர்கள் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாலில் தண்ணீர் கலந்துள்ளனரா? ரசாயனம் கலந்துள்ளனரா? தரமற்ற பாலா? என சோதனை நடத்தினர். மேலும் பால் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தரமற்ற பால் மற்றும் கலப்பட பால் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து மானாமதுரை நகர் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆய்விற்காக ஒரு சிலரிடம் பால் எடுக்கப்பட்டுள்ளது. கலப்பட பால் விற்பனை செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

1 More update

Related Tags :
Next Story