திருவிழா கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
திருவிழா கடைகளில் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
சிவகங்கை
இளையான்குடி,
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள சில கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சரவணகுமார், ராஜேஷ் குமார் ஆகியோர் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கடைகளில் காலாவதியான டீ தூள், குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து, காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை கீழே கொட்டி அழித்தனர்.
Related Tags :
Next Story