100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்


100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
x

அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் இன்று(புதன்கிழமை) நடக்கிறது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் இன்று(புதன்கிழமை) நடக்கிறது.

அகல ரெயில் பாதை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட மீட்டர்கேஜ் பாதையில் ெரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த மீட்டர்கேஜ் பாதையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கொல்கத்தாவில் இயக்கப்பட்டது போல் டாம் ெரயில் இயக்கப்பட்டது.

இந்த டாம் ரெயிலும் சுனாமி தாக்குதலுக்கு பிறகு நிறுத்தப்பட்டது. இதையடுத்து அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ெரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்தது.

ரெயில் சோதனை ஓட்டம்

இந்த நிலையில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து திருச்சி தென்னக ெரயில்வே அதிகாரிகள் அகஸ்தியன்பள்ளிக்கு நேற்று வந்து அகல ரெயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைதொடர்ந்து அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதையில் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு ரெயில் சோதனை ஓட்டம் தென்னக ரெயில்வே தலைமை பொறியாளர் கோஸ்சாம் தலைமையில் நடக்கிறது.

100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது

இந்த சோதனை ஓட்டம் 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி நடத்தப்படுகிறது. இதற்காக நேற்று ரெயில் பாதையில் ஊழியர்கள் இறுதி கட்ட பணியில் ஈடுபட்டனர்.

சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி மாதத்தில் ஆகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே ரெயில் சேவை தொடங்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story