அகல ரெயில் பாதையில் சோதனை ஓட்டம்


அகல ரெயில் பாதையில் சோதனை ஓட்டம்
x

அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே அகல ரெயில்பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது. இதில் 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே அகல ரெயில்பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது. இதில் 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

அகல ரெயில் பாதை பணி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட மீட்டர் கேஜ் பாதையில் ெரயில் போக்குவரத்து நடைபெற்றது. இந்த மீட்டர்கேஜ் பாதையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ெரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ெரயில் பாதை அமைக்க ரூ.288 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அகல ரெயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.

ரெயில் சோதனை ஓட்டம்

இதை தொடர்ந்து இந்த அகல ரெயில் பாதயைில் அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. முன்னதாக அகஸ்தியம்பள்ளி ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதையடுத்து ரெயிலை தென்னக ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் அபாய்குமார் ராய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் பொதுமேலாளர் மணிஸ் அகர்வால், தெற்கு ரெயில்வே கட்டுமான பிரிவு முதன்மை நிர்வாக அலுவலர் நித்திஸ்குமார், தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு என்ஜினீயர் இமாம் கோசாமி மற்றும் ரெயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உற்சாக வரவேற்பு

வேதாரண்யத்தில் 19 ஆண்டுகளுக்கு பிறகு ெரயில் ஓடியதால் அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பபு அளித்தனர்.


Next Story