இலவச பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்


இலவச பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இலவச பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கோடைகால விடுமுறைகள் விடப்பட்டது. மேலும் கோடை விடுமுறை வருகிற 6-ந் தேதியுடன் முடிவடைந்து 7-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசின் இலவச பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

ராமநாதபுரம் ஸ்மார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அரசின் இலவச பாட புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு சரக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதே போல் வேளானூர் அரசு பள்ளியில் இருந்தும் அரசின் இலவச பாட புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 160 பள்ளிகளுக்கு அரசு இலவச பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்னும் 3 நாட்களுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி முடிவடைந்து விடும். வருகின்ற 7-ந் தேதி பள்ளி திறந்தவுடன் அந்தந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்றார்.


Next Story