தடுப்பூசி போடாதவருக்கு செலுத்தியதாக குறுஞ்செய்தி


தடுப்பூசி போடாதவருக்கு செலுத்தியதாக குறுஞ்செய்தி
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடாதவருக்கு, செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடாதவருக்கு, செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

96 சதவீதம் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2-வது டோஸ், கோவை மாவட்டத்தில் 96 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 25-ந் தேதி இதற்கான முகாம் நடைபெற்றது. வருகிற 30-ந்தேதிக்கு பின்னர் இலவசமாக தடுப்பூசி போடப்படாது என்பதால் முகாமில் கூட்டம் காணப்பட்டது. இதுவரை கோவை மாவட்டத்தில் 3 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

போடாதவருக்கு குறுஞ்செய்தி

கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் நாயர் என்பவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசியை நெம்பர் 24 வீரபாண்டி பகுதியில் அமைக்கப்பட்ட முகாமில் போட்டார்.

இந்தநிலையில் நேற்று அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கடந்த 25-ந்தேதி போடப்பட்டுள்ளதாக தகவல் இடம்பெற்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பூஸ்டர் டோஸ் போடாமலே போட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் ராஜேஷ் நாயர் தற்போது இந்தியாவில் எங்கு சென்றாலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

பரபரப்பு

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணாவிடம் இதுகுறித்து கேட்டபோது, இதுபோன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுபோல் மேலும் பலருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story