நெசவுத் தொழிலை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்


நெசவுத் தொழிலை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்
x

நெசவுத் தொழிலை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று காங்கிரஸ் நெசவாளர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நெசவாளர் அணி மாவட்ட தலைவர் எஸ்.எம்.தேவராஜ் தலைமை தாங்கினார்.

குடியாத்தம் நகர தலைவர் கோ.ஜெயவேலு, துணைத்தலைவர்கள் ஆர்.காந்தி, பி.என்.கோவிந்தராஜ், குடியாத்தம் தெற்கு ஒன்றிய தலைவர் தணிகைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் ஜி.நயீம்பர்வேஸ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக நெசவாளர் அணி மாநில தலைவர் ஜி.என்.சுந்தரவேல், மாநில பொருளாளர் அனகை விமல்காந்த் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் நெசவுத்தொழிலை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தேக்கமடைந்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சேலை ரகங்களை ஏற்றுமதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் மகளிருக்கு பயனுள்ள திட்டம். ஆனால் அனைத்து நெசவாளர்கள் குடும்பங்களுக்கும் அந்த திட்டம் சென்றடையவில்லை. எனவே அனைத்து நெசவாளர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணைத்தலைவராக நயீம்பர்வேஸ், மாநில செயற்குழு உறுப்பினராக கே.இ.சரத்சந்தர், மாவட்ட பொதுச்செயலாளராக டாக்டர் சிவசிதம்பரநாதன் உள்பட 75 புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

முடிவில் நகர துணைத்தலைவர் ரகுமான் நன்றி கூறினார்.



Related Tags :
Next Story