சிறுமியை திருமணம் செய்த ஜவுளி நிறுவன தொழிலாளி கைது


சிறுமியை திருமணம் செய்த ஜவுளி நிறுவன தொழிலாளி கைது
x

சிறுமியை திருமணம் செய்த ஜவுளி நிறுவன தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் அருகே உள்ள என்.புதூரை சேர்ந்தவர் பழனியப்பன் என்கிற முரளி (வயது 37). ஜவுளி நிறுவன தொழிலாளி. இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம நல அலுவலர் தமிழரசி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிந்து, சிறுமியை திருமணம் செய்த பழனியப்பன் என்கிற முரளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story