தேய்பிறை பஞ்சமி வழிபாடு
அரசூர் ஏழு மடத்தியம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு
விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் ஏழு மடத்தி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மூலவர் வராகி அம்மன் சந்தன காப்பு மற்றும் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 6 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ஹோமங்கள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அன்னை வராகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தார்கள்.
Related Tags :
Next Story