தடப்பள்ளி, அரக்கன்கோட்டைவிதைப்பண்ணைகளில் உதவி இயக்குனர் ஆய்வு


தடப்பள்ளி, அரக்கன்கோட்டைவிதைப்பண்ணைகளில் உதவி இயக்குனர் ஆய்வு
x

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை விதைப்பண்ணைகளில் உதவி இயக்குனர் ஆய்வு செய்தாா்.

ஈரோடு

தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த தனியார், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் விதைப்பண்ணைகள் அமைத்துள்ளன. இந்த விதை பண்ணைகளை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககக்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'விதை உற்பத்தியாளர்கள் இந்த பகுதியில் நெல் ஏ.டி.டி.37, ஏ.எஸ்.டி.16, டி.பி.எஸ்.5, எம்.டி.யு.1010, என்.எல்.ஆர்.34449 ஆகிய ரகங்களின் வல்லுனர் மற்றும் ஆதாரநிலை ஒன்று விதைகளை கொண்டு விதைப்பண்ணைகளை அமைத்துள்ளனர். இந்த விதை பண்ணைகள் தற்போது பூப்பருவம் முதல் அறுவடை நிலை வரை உள்ளது. இந்த விதை பண்ணைகளின் வயல் தரம் ஆய்வு செய்யப்பட்டு சாகுபடியாளர்களுக்கு பயிர் பாதுகாப்பு மற்றும் அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது' என்றார்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நெல் ரகங்களான ஏ.எஸ்.டி.21, கோ.54, கோ.55 மற்றும் ஏ.டி.டி.57 ஆகிய ரகங்களின் உண்மைநிலை மாதிரி விதைப்பண்ணைகளும் ஆய்வு செய்யப்பட்டு, ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் கோபி உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


Related Tags :
Next Story