திருராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடுஇன்று நடக்கிறது


திருராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடுஇன்று நடக்கிறது
x
தினத்தந்தி 20 Jan 2023 7:15 PM GMT (Updated: 20 Jan 2023 7:15 PM GMT)

திருராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு இன்று நடக்கிறது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருராமேசுவரம் கிராமத்தில் ராமநாதசாமி கோவில் உள்ளது. இலங்கையில் அசுரர்களை அழித்து விட்டு ராமர் திரும்பும் வழியில் பிதுர் தோஷம் நீங்கவும், போரில் பலரை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி (கொலை பாவம்) நீங்கவும் திருராமேசுவரத்தில் 5 நாட்கள் சிவபூஜை செய்ததாக தலவரலாறு கூறுகிறது. இங்கு உள்ள பிரம்ம தீர்த்தத்தில் அமாவாசை நாட்களில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். முற்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் ராமநாதசாமி, மங்களநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். பிதுர் (முன்னோர்) தோஷம் போக்கும் தலமான இங்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரம்ம தீர்த்தத்தில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இன்று (சனிக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வினோத்கமல், செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story