சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தை மாத கிருத்திகை வழிபாடு


சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தை மாத கிருத்திகை வழிபாடு
x

நெமிலி சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தை மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அண்ணாசலையில் உள்ள பிரசித்திபெற்ற சிவ சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டு தோறும் தை கிருத்திகை வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி நேற்று கோவிலில் தை கிருத்திகை வழிபாடு நடந்தது. அதையொட்டி சிவசுப்பிரமணியசாமிக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் ஆகிய சுகந்த திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு சிறப்புப்பூஜைகள் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் வள்ளி, தெய்வானை சமேத சிவ சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் திரளான பக்தர்கள் கிருத்திகை விரதம் கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story