பேரூர் நொய்யல் படித்துறையில் தை அமாவாசை வழிபாடு
பேரூர் நொய்யல் படித்துறையில், தை அமாவாசை வழிபாடு நடைபெற்றது. முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
பேரூர்
பேரூர் நொய்யல் படித்துறையில், தை அமாவாசை வழிபாடு நடைபெற்றது. முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
பேரூர் படித்துறை
தை அமாவாசை அன்று நீர்நிலைகளுக்கு சென்று நீராடி பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அதன்படி தைஅமாவாசையையொட்டி கோவையை அடுத்த பேரூர் நொய்யல் படித்துறையில் நேற்று பக்தர்கள் திரண்டனர்.
அவர்கள், இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு அரிசி, காய்கறிகள், எள்சாதம், பழம், கற்பூரம் உள்ளிட்ட படையல் வைத்து திதி கொடுத்து மற்றும் தர்ப்பண வழிபாடு செய்தனர்.
இதன் மூலம் இறந்துபோன முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் நேற்று தை அமாவாசை என்பதால் காலை முதலே நொய்யல் படித்துறையை நோக்கி பக்தர்கள் வந்தனர். அவர்கள், ஆற்றங்கரையோரம் மற்றும் படித்துறை பகுதிகளில் அமர்ந்து இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பண வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் வழிபாடு
இதில் சில பக்தர்கள் பசு மாடுகளுக்கு அகத்திக் கீரைகளையும், சாதுக்களுக்கு அன்னதான பொட்டலமும் வழங்கினர். இதையடுத்து பக்தர்கள், பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்குள் சென்று நெய் விளக்கேற்றி சாமியை தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலையில் குளிர் அதிகமாக இருந்ததால் பேரூர் படித்துறை பகுதியில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. தை அமாவாசையையொட்டி பேரூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.