தக்கோலம் பேரூராட்சி கூட்டம்


தக்கோலம் பேரூராட்சி கூட்டம்
x

தக்கோலம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

தக்கோலம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கோமளா ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மாதேஷ்வரன் வரவேற்றார். கூட்டத்தில் தக்கோலம் பெரிய தெருவில் சிமெண்டு சாலை அமைத்தல், குளம் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து பேரூராட்சி தலைவர் நாகராஜன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு புகையில்லா போகி பண்டிகை உறுதி மொழி ஏற்று, பின்னர் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.


Next Story