தக்கோலம் பேரூராட்சி கூட்டம்
தக்கோலம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
தக்கோலம் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரிய தெரு சிமெண்டு சாலை, வீராசாமி முதலி குட்டை சீரமைப்பு, எஸ்.எம். கண்டிகை, பெரிய தெருவில் உள்ள சமுதாய கழிப்பிடம் ஆகிய திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தக்கோலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே புதிய மின் விளக்குகள், ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைத்தல், பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமரா அமைப்பது, தற்போது நடைபெறும் சாலை அகலப்படுத்தும் பணிகளின் போது ஏற்படும் செலவினங்களை பொது நிதியில் இருந்து ஈடு செய்வது, அம்மன் நகரில் குடிநீர் பைப் லைன் அமைத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கோமளா ஜெயகாந்தன், மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி மன்ற எழுத்தர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.