அந்தியூர் அருகே தம்பிக்கலை அய்யன் கோவிலில் தேர்த்திருவிழா; சுடுகஞ்சியை உடலில் தெளித்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்


அந்தியூர் அருகே தம்பிக்கலை அய்யன் கோவிலில் தேர்த்திருவிழா; சுடுகஞ்சியை  உடலில் தெளித்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்
x

அந்தியூர் அருகே நடந்த தம்பிக்கலை அய்யன் கோவில் தேர்த்திருவிழாவில் சுடுகஞ்சியை உடலில் தெளித்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே நடந்த தம்பிக்கலை அய்யன் கோவில் தேர்த்திருவிழாவில் சுடுகஞ்சியை உடலில் தெளித்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர்.

தம்பிக்கலை அய்யன்

அந்தியூர் அருகே உள்ள பொதியாமூப்பனூரில் புகழ்பெற்ற தம்பிக்கலை அய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணிமாதம் தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவுக்காக கடந்த 8-ந் தேதி கோவிலில் பூச்சாட்டப்பட்டது. 15-ந் தேதி கோவிலில் கொடி ஏற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதற்காக அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்து 60 அடி உயர மகமேறு தேரில் தம்பிக்கலை அய்யன் சாமி எழிந்தருளினார். இதையடுத்து அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வனக்கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை தோளில் சுமந்து சென்றனர்.

சுடுகஞ்சிைய தெளித்து...

வனக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தனர். ஏராளமான கிடாய்களும் பலிகொடுக்கப்பட்டன. அப்போது பூசாரி கோவில் முன்பு பானையில் சமைத்து தயார் செய்து வைக்கப்பட்டு இருந்து சுடுகஞ்சியை தென்னம்பாலையில் நனைத்து, உடலில் தெளித்து பூஜை நடத்தினார்.

அவரை தொடர்ந்து ஆண், பெண் பக்தர்களும் சுடுகஞ்சியை உடலில் தெளித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

தம்பிக்கலை அய்யன் கோவிலில் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டு சுடுகஞ்சியை உடலில் தெளித்துக்கொண்டால், தீராத நோய்கள் தீரும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வாணவேடிக்கை

ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், சேலம், கோவை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டனர். இன்று (வியாழக்கிழமை) காலை மகமேறு தேர் மீண்டும் வனக்கோவிலில் இருந்து மடப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இரவு வாணவேடிக்கையுடன் விழா நிறைவு பெறுகிறது.

தம்பிக்கலை அய்யன் கோவிலில் திருவிழாவையொட்டி அந்தியூர், ஆப்பக்கூடல், பவானியில் இருந்து பொதியாமூப்பனூருக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story