தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது


தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
x

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருச்சி

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

பங்குனி தேர்த்திருவிழா

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழா ஆண்டு தோறும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இக்கோவில் திருவிழாவில் பெரிய தேர், சின்னத்தேர் என இரண்டு தேர்களையும் பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக செல்வர்.

ஒரு வாரகாலம் நடைபெறும் இத்திருவிழா காண்போர் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும்.

இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 23-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து இரவு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

தேர் தலையலங்காரம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் நிகழ்ச்சி வருகிற 4-ந் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தேர் செல்லும் முக்கிய வீதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அவருடன் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.


Next Story