போலீஸ் ரோந்து வாகனங்களை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு


போலீஸ் ரோந்து வாகனங்களை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு
x

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் ரோந்து வாகனங்களை தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருவாரூர்

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் ரோந்து வாகனங்களை தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக திருவாரூர் ஆயுதப்படையில் நடந்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அப்போது மாவட்டத்தில் உள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர போலீஸ் வாகனங்களை ஆய்வு செய்து அவற்றின் பராமரிப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார். மேலும் போலீசாரின் உடை பொருட்களை பார்வையிட்டார்.

ரோந்து வாகனம் அறிமுகம்

மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் ரோந்து பணியை அதிகரிக்கும் விதமாக கூடுதலாக இருசக்கர வாகனங்களை வழங்கி, பள்ளி, கல்லூரி பகுதிகளில் ரோந்து போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக பிங்க் கலர் புதிய ரோந்து வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று நட்டார். பின்னர் ஆயுதப்படை அலுவலகங்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் தனிப்பிரிவு, குற்றப்பிரிவு, குற்ற பதிவேடுகளின் கூடம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களையும் ஆய்வு செய்தார்.

செல்போன்கள் ஒப்படைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 50 செல்போன்களை சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது. இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் டி.ஐ.ஜி. கயல்விழி வழங்கினார்.

அப்போது திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். எந்தநேரத்திலும் மக்களுக்கு உதவிட போலீஸ் தயாராக உள்ளது என டி.ஐ.ஜி. கயல்விழி கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உடனிருந்தார்.


Next Story