தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் அமமுக-விலிருந்து நீக்கம்..!
டிடிவி தினகரனின் அமமுகவுக்கு இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகரை அமமுக-விலிருந்து நீக்கம் செய்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தஞ்சையை சேர்ந்த எம்.சேகர் இன்று மதியம் 12 மணிக்கு அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரனின் அமமுகவுக்கு இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story