"நன்றி அண்ணா"- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தேஜஸ்வி யாதவ் டுவீட்


நன்றி அண்ணா- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தேஜஸ்வி யாதவ் டுவீட்
x

பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணியில் மீண்டும் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரியாக தேஜஸ்வி யாதவ் பதவியேற்று ஏற்றுக்கொண்டனர்.

சென்னை,

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதனால் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், பீகார் மாநில முதல் மந்திரியாக 8-வது முறையாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் நேற்று பதவியேற்று கொண்டார்.

பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ்குமாருக்கு கவர்னர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியின் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகார் மாநில துணை முதல் மந்திரியாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் பீகார் மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் மற்றும் துணை முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"நந்திரி அண்ணா..! இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீழ்த்துவோம். அதற்கான நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story