நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மாத மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி


நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மாத மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி
x

நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மாத மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி

திருவாரூர்

நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மாத மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி கூட்டம்

திருவாரூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-

பருவமழை தொடங்க இருப்பதால் அனைத்து வார்டுகளிலும் பாரபட்சம் இன்றி மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும். நகராட்சி முழுவதும் உள்ள வார்டுகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து தர வேண்டும். நகர்மன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றனர்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

இதையடுத்து அனைவரின் புகைப்படங்களும் சேகரித்து ஒரு வார காலத்திற்குள் அடையாள அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மாத மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி மேலாளர் முத்துக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், சங்கர், செந்தில், ரஜினி சின்னா, அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story