நீதிமன்ற வளாகத்தில் பருவ மழைபாதுகாப்பு குறித்து ஒத்திகை


நீதிமன்ற வளாகத்தில் பருவ மழைபாதுகாப்பு குறித்து ஒத்திகை
x
திருப்பூர்


தமிழ்நாடு சட்டப்பணிக்குழு ஆணைக்கிணங்க தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் பேரிடர் விழிப்புணர்வு முகாம் தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பி.ஜான்மினோ தலைமை தாங்கினார். தாராபுரம் வட்ட சட்டப்பணிக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு, உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் மாவட்ட தீயணைப்பு துணை அலுவலர் வீரராஜ் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ளம் பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மற்றும் தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், பேரிட மீட்பு பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீயணைப்பு வீரர்கள் நீதிபதிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஒத்திகை நடத்தி காட்டினார்கள். நிகழ்ச்சியின் போது தாராபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் இளஞ்செழியன் சங்க செயலாளர் எம்.ஆர். ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story